UPDATED : அக் 14, 2026 05:09 PM
ADDED : அக் 14, 2026 05:06 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மேலநெட்டூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமிற்கு கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ., இளங்கோவன் முன்னிலை வகித்தார். பல்வேறு துறைகள் சார்பில் 121 பயனாளிகளுக்கு ரூ34.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில் கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, மானாமதுரை தாசில்தார் மகாதேவன்,பி.டி.ஓ.,க்கள் பெமினா தேவி, முத்துக்குமரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
