வெயிலின் தாக்கம் அதிகரிப்பு தவிக்கும் பொதுமக்கள்
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு தவிக்கும் பொதுமக்கள்
ADDED : மார் 20, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
திருப்புவனம்: திருப்புவனத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தவிப்பிற்குள்ளாகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல், மே ,ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக ஜனவரி முதலே வெயிலின் தாக்கம் தொடங்கியது. நான்கு வழிச்சாலை பணிக்காகவும் ஆக்கிரமிப்பு என்ற பெயரிலும் திருப்புவனம் பகுதியில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டன.
அகற்றப்பட்ட மரங்களுக்கு பதில் புதிதாக நடவு செய்யயப்பட்ட மரங்களுக்கும் முறையாக தண்ணீர் பாய்ச்சாததால் கருகி வருகின்றன.
வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் இளநீர், பழச்சாறு, பழங்களை நாடி வருகின்றனர்.
