ADDED : மார் 04, 2026 05:32 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட தரக்கட்டுப்பாடு ஆய்வக கட்டட திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வகத்தை திறந்து வைத்தார். தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சந்திரன் முன்னிலை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராகிம் உட்பட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். அமைச்சர் கூறியதாவது:
இம்மாவட்டத்தில் ஆண்டிற்கு ரூ.200 கோடியில் பாலம், தார் ரோடு அமைத்தல் போன்ற பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் தரமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காகவே சிவகங்கையில் தரக்கட்டுப்பாடு ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
