/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குயிலி நினைவு தினம் கட்சியினர் மரியாதை
/
குயிலி நினைவு தினம் கட்சியினர் மரியாதை
ADDED : அக் 13, 2024 04:37 AM
சிவகங்கை: சிவகங்கையில் சுதந்திர போராட்ட வீரர் குயிலி 244வது நினைவுதினம் சிவகங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் உள்ள குயிலி நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.
பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, நகர் தலைவர் உதயா, தேசிய செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாவட்ட பொதுசெயலாளர் மார்த்தாண்டம், மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியம், ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன், மாநில பொதுக்குழு பாலமுருகன், ஒன்றிய தலைவர்கள் நாட்டரசு, மயில்சாமி, நகர் பொது செயலாளர் பாலா மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில், நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, அருள் ஸ்டீபன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.