ADDED : அக் 13, 2024 04:42 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அரசு பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகளை நடத்தி எமிஸ் தளத்தில் பதிவு செய்ய முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2024--25ஆம் கல்வியாண்டிற்கான இலக்கிய மன்றம் தமிழ், ஆங்கிலம் மற்றும் வினாடிவினா போட்டிகளை நடத்தவேண்டும்.
இலக்கி மன்றத்தில் கட்டுரை எழுதுதல், கதை சொல்லுதல், பேச்சு போட்டி, கவிதை எழுதுதல் போட்டிகளை அக்.14 முதல் 16 வரை நடத்த வேண்டும். ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் வீதம் தமிழ் 1, ஆங்கிலம் 1 வீதம் 8 மாணவர்கள் தேர்வு செய்து அக்.18க்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வினாடி வினா நவ.4 முதல் நவ.6 வரை நடத்த வேண்டும். ஒரு குழுவிற்கு 2 மாணவர்கள் வீதம் 4 குழுக்கள் தேர்வு செய்து நவ.8 க்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.