ADDED : ஏப் 03, 2026 05:44 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் நரிக்குடி ரோடு ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக இன்று ஒரு நாள் மட்டும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனத்தில் இருந்து அல்லிநகரம், மேலராங்கியம், நாங்கூர், நரிக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பாதையில் மின்மயமாக்கப்பட்ட மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதை குறுக்கிடுகிறது.
இந்த இடத்தில் தானியங்கி ரயில்வே கேட் அமைக்கப்பட்டு ரயில்கள் வந்து செல்லும் போது கேட் அடைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படும். நாள் ஒன்றுக்கு பயணிகள் ரயிலுக்காக ஆறு முறை திறந்து மூடப்படும், இதுதவிர சரக்கு ரயில்கள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவற்றிற்காகவும் கேட் திறந்து மூடப்படுகிறது. ரயில்வே கேட் பகுதியில் இன்று (ஏப்ரல் 3ம் தேதி) காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை பராமரிப்பு பணிக்காக மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே கிராம மக்கள் இன்று ஒரு நாள் மட்டும் மாற்று பாதையை பயன்படுத்தி சென்று வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
