/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்கப்பணி மந்தம் நகரும் படிக்கட்டு அமைப்பதில் இழுபறி

ADDED : நவ 16, 2025 04:17 AM
காரைக்குடி: மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் உள்ள 1200க்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களை தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனிற்கு 30க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இங்கு, அம்ரித் திட்டத்தின் கீழ் ரூ. 13.57 கோடி மதிப்பீட்டில் 2023 ஆம் ஆண்டு புதுப்பிப்பு பணிகள் தொடங்கப்பட்டது.
எஸ்கலேட்டர் லிப்ட், பார்க்கிங், மின்விளக்குகள், ரயில்வே ஸ்டேஷ னின் இரு நுழைவு வாயிலிலும் ஆர்ச், பயணிகள் அமர கூடுதல் இடம், ரயில் பெட்டிகளை அறிய டிஜிட்டல் போர்டு, கண்காணிப்பு கேமரா பயணிகளுக்கு தங்கும் விடுதிகள் என பல்வேறு வசதிகளுடன் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
பணிகளும் நடந்து வரும் நிலையில், எஸ்கலேட்டர் அமைப்பது குறித்த எந்த பணியும் இதுவரை நடைபெறவில்லை. காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் கடைசி பகுதியில் மேம்பாலம், இருப்பதால் பிளாட்பாரத்தில் நடந்து மேம்பாலத்தை சிரமமாக உள்ளது.
எஸ்கலேட்டர் அமைக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் படியுடன் கூடிய மேம்பாலம் கட்டுவது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதிகாரிகள் கூறுகையில்: புதிதாக ஒரு மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தொடர்ந்து எஸ்கலேட்டர் அமைக்கும் பணியும் விரைவில் நடைபெறும்.