ADDED : ஜன 16, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரண்டு நாட்களாக இரவில் லேசான மழை பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று பகலில் தேவகோட்டை நகரிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் நல்ல மழை பெய்தது. கிராமங்களில் நெற்பயிர் அறுவடை பணி தொடங்கி உள்ளது. ஏற்கனவே ஆர்.என்.ஆர் நெற்பயிர்களில் நெற்கதிர்கள் சாய்ந்து விட்டன. இந்த சூழ்நிலையில் நேற்று பெய்த மழையில் மேலும் வயல்களில் தண்ணீர் சூழ்ந்ததால் நெற்பயிர்கள் சாய்ந்து விட்டன.
ஆர் என்.ஆர். நெற்பயிர்கள் தவிர டீலக்ஸ் பொன்னி உட்பட மற்ற நெற்பயிர் வயல்களில் தண்ணீர் உள்ளதால் வயல்களில் இறங்கி நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. காய்ந்த வயல்களில் இறங்கி அறுவடை செய்யும் இயந்திரங்கள் தான் அதிகம் வந்துள்ளதால் விவசாய அறுவடை பணி பாதித்துள்ளது.