/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் நாள் முழுவதும் மழை
/
தேவகோட்டையில் நாள் முழுவதும் மழை
ADDED : நவ 27, 2024 08:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டையில் நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கிய மழை தொடர்ந்து இரவு வரை பெய்து கொண்டே இருந்தது.
சிவகங்கை மாவட்டத்திற்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்தும் கூட பள்ளி வழக்கம் போல் இயங்கியது. காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவியர் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் மழையில் நனைந்தபடியே சென்றனர். இரவு முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் புயல் நிலவரத்தை ஆய்வு செய்து பள்ளி விடுமுறை குறித்து முன்பே அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

