/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கோட்டையில் மழையை நம்பி நெல் விவசாயம் துவக்கம்
/
சாக்கோட்டையில் மழையை நம்பி நெல் விவசாயம் துவக்கம்
ADDED : நவ 11, 2025 11:53 PM

காரைக்குடி: சாக்கோட்டை வட்டாரத்தில் 4, 500 எக்டேரில் விவசாயம் நடைபெறுகிறது. மழையை நம்பியே விவசாயம் நடைபெறும் இப்பகுதியில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள், விவசாய பணியில் ஆர்வம் காட்டதொடங்கினர். உழவு, உரம் விதை நெல், கூலி என ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து வருகின்றனர்.
டீலக்ஸ் மற்றும் குண்டு நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். விதைப்பு பணியைத் தொடர்ந்து, தற்போது விவசாயிகள் உரம் மற்றும் களை எடுப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை பெய்தால் மட்டுமே விவசாயி பணியை மேற்கொள்ள முடியும். மழையை நம்பி விவசாயிகள் விவசாய பணிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

