ADDED : செப் 30, 2026 04:23 AM

காரைக்குடி: கல்லல் அருகேயுள்ள குருந்தம்பட்டில் தொடர் மழை காரணமாக விவசாயிகள் விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லல் வட்டாரத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக விவசாயிகள் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குருந்தம்பட்டில் பெருங்கரை கண்மாய் உட்பட 5க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.
இதன்மூலம் 300 ஏக்கருக்கும் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி விவசாயப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உழவுப்பணியை தொடர்ந்து விவசாயிகள் நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்; தற்போது தொடர் மழையால் உழவுப் பணியை மேற்கொண்டுள்ளோம். உழவுப் பணியை முடித்து நெல் விதைப்பில் ஈடுபடுவோம். தொடர் மழை பெய்தால் மட்டுமே விவசாயப் பணியை மேற்கொள்ள முடியும்.
