நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:காரைக்குடி,அமராவதிபுதுார், அரியக்குடி, உட்பட சுற்று வட்டார பகுதியில், நேற்று மதியம் தொடங்கி மாலை வரை மழை கொட்டி தீர்த்தது. காரைக்குடியில் பல நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது.
இந்நிலையில் நேற்று மாலை, பலத்தக்காற்று, இடியுடன் கனமழை பெய்தது. இதில், கல்லுாரிச்சாலை, கழனிவாசல், சுப்ரமணியபுரம், சூடாமணிபுரம், ரயில்வே ரோடு உட்பட பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

