ADDED : ஏப் 04, 2026 06:04 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:மானாமதுரை, காளையார்கோயிலில் நேற்று மழை பெய்ததை தொடர்ந்து வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் சில வாரங்களாக வெயில் கடுமையாக காணப்படுகிறது. இரவில் புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மானாமதுரையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மின்வெட்டும் ஏற்பட்டது.
நேற்று மாலை 4: 20 மணிக்கு கருமேகங்கள் கூடி மழை பெய்ய துவங்கியது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
