ADDED : ஆக 28, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை, ஆக.28-
மானாமதுரையில் நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. பொதுமக்கள் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்
மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5:30 மணி முதல் அரை மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையை எதிர்பார்த்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு இந்த மழை
மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால் நிலத்தடி
நீர்மட்டம் உயர்வதுடன், விவசாயப் பணிகளுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
