ADDED : ஏப் 27, 2025 07:23 AM

சிவகங்கை : சிவகங்கையில் கோடை வெயிலால் வறண்டு கிடந்த நகரில் மதியம் 12:15 மணிக்கு திடீர் என மழை பெய்ய தொடங்கியது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் குறைந்தது. நகரில் காந்திவீதி, சிவன் கோவில் பின்புறம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மழைநீர் கழிவு நீருடன் தேங்கியது. வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பகல் முழுவதும் கொளுத்தும் வெயில் காரணமாக மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
கடும் வெயில் காரணமாக சாலையோர வியாபாரிகள் பலரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
நேற்று காலை முதலே மானாமதுரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12:00 மணியளவில் சிறிது துாறல் விழுந்ததுடன் சரி, பெரிய மழை பெய்து வெப்பம் தணியும் என எதிர்பார்த்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். வெப்பத்தை கிளறி விட்டதால் புழுக்கத்தால் மக்கள் தவித்தனர்.

