நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று மாலை திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தாலும் திருப்புவனம் வட்டாரத்தில் மழையே இல்லை. கடும் வெயிலால் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், தெருவோர வியாபாரிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
நேற்று மாலை 5:40 மணிக்கு திடீரென வானம் மேக மூட்டத்துடன் மழை பெய்ய தொடங்கியது, இரவு 7:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. ரோட்டில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியது.
செப்டம்பரில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக இந்த மழை பெய்ததால் ஓரளவிற்கு விவசாயத்திற்கு கை கொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

