தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனத்தில் மழை

திருப்புவனத்தில் மழை

திருப்புவனத்தில் மழை


UPDATED : ஜூன் 18, 2026 10:19 PM

ADDED : ஜூன் 18, 2026 09:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2026 10:19 PM ADDED : ஜூன் 18, 2026 09:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்:திருப்புவனத்தில் ஜூன் 17ல் இரவு பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

திருப்புவனம் வட்டாரத்தில் சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பகல் முழுவதும் கொளுத்திய வெயில் காரணமாக இரவில் வீடுகளில் இருக்கவே முடியவில்லை. மேலும் அன்றாட கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் வெயில் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜூன் 17ல் இரவு 7 :00 மணி முதல் 9:00 மணி வரை சாரல் மழை பெய்தது. இரண்டு மணி நேரம் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. திருப்புவனத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 44.2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருந்தது.

சிவகங்கை நேருபஜார், அரண்மனைவாசல், காந்திவீதி, மஜித்ரோடு, போஸ்ரோடு,அரண்மனைவாசல் ரோட்டில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து ரோட்டில் ஒடியது. கடைகளுக்கு முன் தேங்கிய கழிவுநீரால் மக்களும் வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டனர். ச நகராட்சி நிர்வாகம் இனிவரும் காலங்களில் முறையாக கால்வாயை துார்வாரி மழைநீர் தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்யவேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us