UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 06:34 PM

அ நிறம் | அளவு
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மழை வேண்டி அம்பலத்தாடி கிராமத்தில் புரவி எடுப்பு நடந்தது.
நேற்று முன்தினம் மாலை நான்கு மணிக்கு கிராம மக்கள் ஊர்வலமாக தவத்தாரேந்தல் வேளார் குடியிருப்பிற்கு சென்றனர். அங்கு 13 புரவிகள், ஒரு காளை ஆகியவற்றிற்கு புது வேட்டி, துண்டு, மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தன. அங்கிருந்து ஊர்வலமாக மேளதாளங்களுடன் அம்பலத்தாடி கூத்தாடி அய்யனார் கோயிலுக்கு வந்தனர். திருமணம் தடை நீங்க இளைஞர்கள் நேர்த்திக்கடன் விரதமிருந்து புரவிகளை சுமந்து வந்தனர்.
இரவு அம்பலத்தாடி நாடக மேடையில் நாடகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
