ADDED : மே 07, 2025 02:18 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துாரில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்ததில் ரோடுகளில் மரங்கள் சரிந்தன.
திருப்புத்துாரில் நேற்று மாலை 5:00 மணிக்கு பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யத் துவங்கியது.
சூறாவளிக் காற்று போல் சுழன்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் சரிந்தன. மதுரை ரோட்டில் கல்லூரி அருகில் சில மரங்களும், கருப்பர் கோயில் அருகில் காரைக்குடி ரோட்டிலும் சில மரங்கள் வீழ்ந்தன.
இதனால் மின்வயர்கள் அறுந்தன. மின்துறை, நெடுஞ்சாலை, பேரூராட்சி பணியாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் பெய்த மழையால் பகலில் காணப்பட்ட வெப்பம் வெகுவாக தணிந்தது.
மேலும் மாலை 5:00 மணி யிலிருந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
மீண்டும் இரவு 7:00 மணிக்கு மேல் மழை தொடர்ந்தது.
