/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் ராம நவமி கொண்டாட்டம்
/
திருப்புத்துாரில் ராம நவமி கொண்டாட்டம்
ADDED : ஏப் 07, 2025 06:56 AM

சிவகங்கை : சிவகங்கை நகர் பிராமண சமாஜத்தின் சார்பில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. மடப்புரம் ரமேஷ், முத்து காளீஸ்வரன், ஹரி ஆகியோர் மகா கணபதி ேஹாமம் சுதர்சன ேஹாமம் மற்றும் வேத பாராயணங்களை நடத்தினர்.
தொடர்ந்து ராமர் சீதா தேவி லட்சுமணர் ஆஞ்சநேயருக்கு அபிேஷக ஆராதனை நடந்தது.
மாலையில் ரதத்தில் ராமபிரான் சீதாதேவி லட்சுமணர் ஆஞ்சநேயருடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து ஆஞ்சநேயர் உற்ஸவம் நடந்தது. திருமாஞ்சோலை வெங்கடசுப்பிரமணியன் டாக்டர் கீதா கல்யாணசுந்தரம் குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது.
திருப்புத்துார்: திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ராமநவமியை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் மூலவர் ராமர்,லட்சுமணர், சீதாதேவி ஆகியோருக்கு அபிஷேகம் நடந்தது.
பின்னர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பஜனை செய்து வழிபட்டனர். ஏற்பாட்டினை ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் ட்ரஸ்ட்,பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழுவினர் செய்தனர்.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று காலை 11:30 மணிக்கு மூலவர் மற்றும் உற்ஸவ ராமர், சீதா, லெட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் நேற்று காலை 11:30 மணிக்கு மூலவர் யோகநாராயணப் பெருமாளுக்கு பிரதோஷ குருக்களால் சிறப்பு பூஜைகள் நடந்து அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து சந்தனக்காப்பில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

