ADDED : மார் 31, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகமூர்த்தி மெட்ரிக் பள்ளியில் ரம்ஜான் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார்.
பள்ளி செயலர் சந்திரசேகர் சிறப்பு வகித்தார். சிங்கம்புணரி ஜமாத் தலைவர் ராஜா முகமது, அனிபா ரம்ஜான் பண்டிகை குறித்து பேசினர்.
பள்ளி முதல்வர் கவுரி சாலமன் ஒருங்கிணைத்தார்.
ஆசிரியை மீனா அமுலரசு நன்றி கூறினார்.