ADDED : பிப் 20, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை, - தேவகோட்டை ராமகிருஷ்ண வித்யாலயா நடுநிலை பள்ளியில் ராமகிருஷ்ணரின் 189 வது பிறந்த நாள் விழா பள்ளி தாளாளர் ஜமீன்தார் சோமநாராயணன் தலைமையில் நடந்தது.
வேத பாராயணம், விஷ்ணு சகஸ்ரநாம பூஜைகள் நடந்தன. ரவிக்குருக்கள் பூஜை செய்தார்.
ஆண்டு விழா சங்கத்தலைவர் சிவராமன் தலைமையில் நடந்தது. சாரதேஸ்வரி பிரியாம்பா, ராமகிருஷ்ண பிரியாம்பா முன்னிலை வகித்தனர். பள்ளிக்குழு அருணாசலம் வரவேற்றார். சேவுகன் அண்ணாமலை கல்லூரி தலைவர் லட்சுமணன் பரிசு வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சியில் பேராசிரியர் சிதம்பரம், டாக்டர்பெரியசாமி, நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் துணை தலைவர் ரமேஷ், வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமிதேவி, மாலதி, எழுத்தாளர் இலக்கியமேகம் சீனிவாசன் பேசினர். தலைமையாசிரியை உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

