ADDED : பிப் 19, 2026 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ராமகிருஷ்ணா வித்யாலயம் நடுநிலைப் பள்ளியில் ராமகிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விஷ்ணு சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முற்றோதல் நடந்தது. சாரதா சேவாஸ்ரம சாரதேஸ்வரி ப்ரியாம்பா தலைமையில் ஜெயந்தி விழா நடந்தது.
ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சுவாமி சத்ய ப்ரமானந்த மகராஜ் , மாத்ரு சேவானத்த மகராஜ் ஆசி வழங்கினர். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், பள்ளி கல்விக்குழு ஞானசம்பந்தன் பரிசு வழங்கினர். கல்லூரி தலைவர் லட்சுமணன், ராமகிருஷ்ண ப்ரியாம்பா , முருகேசன், ராமசாமி, இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினர். தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

