/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ராமாயணம், மகாபாரதம் பேச்சுப் போட்டி
/
ராமாயணம், மகாபாரதம் பேச்சுப் போட்டி
ADDED : பிப் 01, 2024 04:12 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் பேரவை, லியோ சங்கம் இணைந்து பேச்சாற்றல் திறன் வளர்க்கும் பேச்சுப் போட்டி நடத்தினர்.
பேராசிரியர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். முதல்வர் தபசம்கரீம் வரவேற்றார். தாளாளர் ரூபன் வாழ்த்தினார். நிறுவனர் ஏ.டி.விக்டர் சிறப்புரையாற்றினார். ராமாயணம், மகாபாரதம் காப்பியங்களில் நான் பெரிதும் விரும்பும் கதாபாத்திரம்' குறித்து மாணவ, மாணவியர் பேசினர்.
போட்டியில் முதல் பரிசை ஆ.பி.சீ.அ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி என்.சஹானா, இரண்டாம் பரிசினை தென்மாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி எம்.அஸ்மிதா மற்றும் நா.ம. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி டேஸ்மிதா, மூன்றாம் பரிசினை ஆ.பி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கே.சௌந்தர்ராஜன், டி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் கே.பூங்குன்றன் மற்றும் ஆர்.சி. பாத்திமாநடுநிலைப் பள்ளி மாணவி மேரி ப்ளோரன்ஸி ஆகியோர் பெற்றனர்.