/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ராமநாதபுரம், மேலுார் ரோட்டில் வளைவுகளில் விரிவாக்க பணி
/
ராமநாதபுரம், மேலுார் ரோட்டில் வளைவுகளில் விரிவாக்க பணி
ராமநாதபுரம், மேலுார் ரோட்டில் வளைவுகளில் விரிவாக்க பணி
ராமநாதபுரம், மேலுார் ரோட்டில் வளைவுகளில் விரிவாக்க பணி
ADDED : ஜூலை 16, 2025 11:31 PM

இளையான்குடி: ராமநாதபுரம்,மேலுார் இடையே செல்லும் ரோட்டில் இளையான்குடி அருகே உள்ள வளைவு பகுதிகளில் ரோடு விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி, இளையான்குடி,சிவகங்கை வழியாக மேலுார் செல்லும் நெடுஞ்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது.
இளையான்குடி அருகே தாயமங்கலம் பகுதியில் ரோட்டில் உள்ள வளைவுகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் கடந்த சில நாட்களாக தாயமங்கலம் அருகே ரோட்டில் உள்ள வளைவு பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு ரோடு ஓரங்களில் வளர்ந்திருந்த கருவேல மரங்களையும் அகற்றி வருகின்றனர்.