ADDED : நவ 28, 2024 05:17 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே கொட்டகுடியை சேர்ந்தவர் வடிவேல் மகன் காளீஸ்வரன் 24. இவர் பெயின்டர் வேலை செய்து வருகிறார். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது மாணவியை காதலித்து வந்தார்.
இந்த மாணவி திருப்பூர் தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். காளீஸ்வரன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அலைபேசி மூலம் பேசி பழகி வந்துள்ளார். காளீஸ்வரன் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பிய அந்த மாணவி கடந்த நவ.6 ஆம் தேதி காளீஸ்வரன் வீட்டிற்கு வந்தார். காளீஸ்வரன் வீட்டில் வைத்து மாணவிக்கு தாலி கட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் தான் கட்டிய தாலியை கழட்டக்கூறியும் இந்த விஷயத்தை யாரிடமும் கூறக்கூடாது என்று மாணவியை மிரட்டி அனுப்பியுள்ளார். மாணவி சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் காளீஸ்வரனை கைது செய்தனர்.