ADDED : ஆக 08, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை (ஆக.,9) காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
இதில், கார்டுதாரர்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை நகல் பெறுதல், அலைபேசி எண் பதிவு, மாற்றுதல் போன்ற பணிகளை செய்யலாம். மேலும், ரேஷன் கடைகள் சார்ந்த குறைகளையும் இக்குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என சிவகங்கை கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.