/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிற பொருட்கள் வாங்கினால் தான் ரேஷன் பொருள்: மக்கள் புகார்
/
பிற பொருட்கள் வாங்கினால் தான் ரேஷன் பொருள்: மக்கள் புகார்
பிற பொருட்கள் வாங்கினால் தான் ரேஷன் பொருள்: மக்கள் புகார்
பிற பொருட்கள் வாங்கினால் தான் ரேஷன் பொருள்: மக்கள் புகார்
ADDED : ஜன 20, 2024 04:48 AM
இளையான்குடி: இளையான்குடியில் உள்ள ரேஷன் கடைகளில் பிற பொருட்களை வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இளையான்குடி, சாலைக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பாம்கோ மூலம் 12க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.மேலும் இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு மாதந்தோறும் கார்டுதாரர்களுக்கு விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை, பாமாயில், துவரம்பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இப்பொருட்களை வாங்க வரும் மக்களிடம் விற்பனையாளர்கள் பிற பொருட்களான சோப்பு, கோதுமை மாவு, ரவை, டீத்துாள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் வழங்க முடியும் என மக்களை கட்டாயப்படுத்தி வருவதாகவும் மேலும் அதில் பாதிப்பொருட்கள் காலாவதியான பொருட்களாக இருப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
விற்பனையாளர்களிடம் கேட்டபோது, பாம்கோ மாவட்ட அலுவலகத்தில் இருந்து மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் கடைகளுக்கு இறக்கும்போது நாங்கள் கேட்காத பொருட்களான பிற பொருட்களையும் இறக்கிவிட்டு விற்பனையாளர்களிடம் அதற்குரிய பணத்தை கட்டச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.
ஆகவே நாங்கள் பொதுமக்களிடம் விற்பனை செய்து வருகிறோம் என்றனர்.