ADDED : மார் 30, 2025 04:56 AM
சிவகங்கை : கோயம்புத்துார் மாவட்டம் பொள்ளாச்சி அருகே சுலேஸ்வரன் பேட்டையை சேர்ந்தவர் சச்சிதானந்தம் மகன் சித்தாதித்தன் 44. இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சோமநாதபுரம் சிவாஜி காலனியில் வசித்து வருகிறார்.
கடந்த ஒரு மாதமாக இங்கு தங்கியிருந்து சுற்று வட்டார பகுதியில் ரேஷன் அரிசியை சேகரித்தார்.
இந்த ரேஷன் அரிசியை தாராபுரம் ராஜ்குமார் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு சோமநாதபுரத்தில் இருந்து சரக்குவாகனத்தில் 35 மூடைகளில் 1,575 கிலோ ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு தாராபுரம் சென்றார்.
திருப்பாச்சேத்தி அருகே சென்றபோது வாகன டயர் வெடித்து ரோட்டில் கவிழ்ந்தது.
மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எஸ்.ஐ., திபாகர் தலைமையிலான போலீசார் சித்தாதித்தனை கைது செய்து வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.