ADDED : மார் 15, 2024 11:46 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு கோட்டையூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., சிவபிரகாசம் உள்ளிட்ட போலீசார் கோட்டையூர் பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த நான்கு சக்கரவாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 28 வெள்ளை நிற சிப்பங்களில் ரேஷன் புழுங்கல் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1120 கிலோ இருந்தது. இதில் ஈடுபட்ட கோட்டையூரைச் சேர்ந்த முத்து மகன் பழனிவேலை 42 போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
