நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சிக்குட்பட்ட நவத்தாவு மற்றும் மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கீழ கொம்புக்காரனேந்தல்ஆகிய கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகளை எம்.எல்.ஏ.,தமிழரசி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா, துணைத் தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் மலைச்சாமி, நாகவள்ளி, சூரக்குளம் பில்லருத்தான் ஊராட்சி தலைவர் ராஜாத்தி, மாங்குளம் ஊராட்சி தலைவர்முருகவள்ளி, துணை தாசில்தார் உமா மீனாட்சி, ஒன்றிய செயலாளர் துரைராஜாமணி, நகர செயலாளர் பொன்னுச்சாமி, பொருளாளர் மயில்வாகனன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.