நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை,- இடைக்காட்டூரில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடத்தை மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை திறந்து வைத்தார்.
இடைக்காட்டூர் ஊராட்சி தலைவர் சண்முகநாதன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் துரைராஜாமணி, அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி சசிகுமார், நகராட்சி கவுன்சிலர் மாரிக்கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் தனபால் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.