/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் கடை பணியாளர்கள் ஜன. 5 முதல் 'ஸ்டிரைக்' அரசுக்கு சங்கங்கள் வலியுறுத்தல்
/
ரேஷன் கடை பணியாளர்கள் ஜன. 5 முதல் 'ஸ்டிரைக்' அரசுக்கு சங்கங்கள் வலியுறுத்தல்
ரேஷன் கடை பணியாளர்கள் ஜன. 5 முதல் 'ஸ்டிரைக்' அரசுக்கு சங்கங்கள் வலியுறுத்தல்
ரேஷன் கடை பணியாளர்கள் ஜன. 5 முதல் 'ஸ்டிரைக்' அரசுக்கு சங்கங்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 17, 2025 05:32 AM
சிவகங்கை: கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடை விற்பனையாளர், எடையாளருக்கு சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை குழு அமைக்காததை கண்டித்து 2026 ஜன., 5 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ரேஷன் கடை விற்பனையாளர், எடையாளர்களுக்கு 5 ஆண்டிற்கு ஒரு முறை அரசு சம்பள உயர்வு பேச்சு வார்த்தை குழுவை அமைத்து, சம்பள உயர்வு மற்றும் அரசு அறிவிக்கும் அகவிலைப்படியை வழங்க வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியில் அரசாணை எண் 184ல் 2021 பிப்., 21 அன்றைய உத்தரவுபடி விற்பனையாளர், எடையாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது.
அக்கால கட்டத்தில் விற்பனையாளர்கள் குறைந்தது ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை சம்பள உயர்வு பெற்றனர். அதே நேரம் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் 2021 ல் தர வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வு தொகை இன்னும் விடுவிக்காமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் 2021க்கு பின் வழங்க வேண்டிய சம்பள உயர்வு வழங்குவதற்கான குழுவை அமைக்க அரசு அக்கறை காட்டவில்லை என ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
சம்பள உயர்வு வழங்குவதற்கான குழு அமைக்காமல், அரசு காலதாமதம் செய்து வருவதை கண்டித்து 2026 ஜன., 5 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

