/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 25, 2025 06:31 AM
சிவகங்கை: பொது வினியோக திட்டத்திற்கு தனி துறை, சரியான எடையுடன் பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சங்க மாநில பொது செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் மாயாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் திருஞானம், பொருளாளர் கவுரி உட்பட சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
விற்பனையாளர்கள் ஏப்., 22 முதல் நேற்று வரை வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ரேஷன் கடைகள் பூட்டி கிடந்தன. பொது மக்கள் தங்கள் கார்டுகளுக்குரிய பொருட்களை பெற முடியாமல் அவதிப்பட்டனர்.

