தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 23, 2026 06:51 PM

ADDED : நவ 23, 2026 06:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 06:51 PM ADDED : நவ 23, 2026 06:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: ரேஷன் கடைகளில் தற்காலிக பணியில் மகளிர் குழுவினரை நியமிக்கும் உத்தரவை ரத்து செய்யக்கோரி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் கே.ஆர்., விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.எம்., மாயாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் திருஞானம், நிர்வாகிகள் சேதுராமன், ராமகிருஷ்ணன், ரேவதி உட்பட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் கவுரி நன்றி கூறினார். பதிவாளர் ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பணிக்கு தற்காலிகமாக மகளிர் குழுவை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். அதை ரத்து செய்து நிரந்தர பணியாளர்களை நியமித்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். ///

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us