/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சித்திரை திருவிழாவில் ராட்டினத்திற்கு அனுமதி
/
சித்திரை திருவிழாவில் ராட்டினத்திற்கு அனுமதி
ADDED : ஏப் 30, 2025 06:22 AM
மானாமதுரை; மானாமதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் ராட்டினம் இயக்க கோர்ட் அனுமதி வழங்கியது.
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் ராட்டினங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கடைகள் அமைக்கப்படும்.
சித்திரை திருவிழா நாளை துவங்கவுள்ள நிலையில் மானாமதுரை வைகை ஆற்றில் ராட்டின உரிமையாளர்கள் ராட்டினங்களை பொருத்தும் பணியில் ஈடுபட்ட போது மானாமதுரை போலீசார் கோர்ட் உத்தரவை காரணம் காட்டி பணிகளை நிறுத்தினர்.
மானாமதுரையைச் சேர்ந்த ராட்டின உரிமையாளர் மூர்த்தி மதுரை ஐகோர்ட் கிளையில் தொடர்ந்த வழக்கில் மானாமதுரை வைகை ஆற்றில் ராட்டினங்களை அமைக்கவும் அதனை பாதுகாப்பான முறையில் இயக்கவும் அனுமதி அளித்ததை தொடர்ந்து ராட்டின உரிமையாளர்களும் தொழிலாளர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

