UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:26 PM
தேவகோட்டை: தேவகோட்டையில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு பெருகி போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியது ஆக்கிரமிப்புக்களால் ஏற்படும் சிரமங்கள், அவதி குறித்து பலரும் சுட்டிக்காட்டியும் அதிகாரிகள் அமைதி காத்தனர். போலீசார், நகராட்சியினர், நெடுஞ்சாலை துறையினர் ஒவ்வொரு துறையினரும் மாறி மாறி குறை சொல்லி நடவடிக்கை எடுக்க தயங்கினர். ஒரு வழியாக ஒரு மாதத்திற்கு முன்பு மூன்று துறை அலுவலர்கள் போலீசார் உதவியுடன் மெயின்ரோட்டில் 50 சதவிகிதம் மட்டுமே அகற்றினர். மற்ற பகுதிகளில் மறுநாள் தொடர்ந்து அகற்றப்படும் பாரபட்சம் காட்ட போவதில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் கூறியும் இன்று வரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
இந்நிலையில் அகற்றப்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரித்து விட்டது. வழக்கமாக ஆக்கிரமிப்பு பொருட்களை எப்போதும் அதிகாரிகள் எடுத்துச் செல்வார்கள். இல்லையேல் ஆக்கிரமிப்பாளர்கள் எடுத்துச் சென்றுவிடுவர். ஆனால் தற்போது ஆக்கிரமிப்பு பொருட்களை அப்படியே போட்டு சென்று விட்டனர். அது தற்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாகி அந்த பொருட்களை வைத்து மீண்டும் தாராளமாக ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். அதிகாரிகளின் நடவடிக்கை கேலி கூத்தாகி விட்டது.
