நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் இளமை கனல் எழுத்தாளர் இயக்கம் மற்றும் வாசிப்பு இயக்கம் இணைந்து தேசிய வாசிப்பு நாள் விழா கொண்டாடினர்.
முன்னாள் மாணவர் மன்ற இயக்குநர் லெனின் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சேவியர்ராஜ், நுாலகர் சூரசங்கரன் வாசிப்பின் அவசியம், பற்றி பேசினர். பொறுப்பாசிரியர் ஸ்டீபன் மிக்கேல் ராஜ், ஆசிரியர் பிலவேந்திரராஜ், நூலகர் சேவியர் பங்கேற்றனர்.