நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் குறு வட்டார அளவிலான கபடி போட்டிகள் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடந்தன. போட்டிகளை முதல்வர் ஜாஸ்மின் சாந்தி தொடங்கி வைத்தார்.
இலந்தைகுளம் அரசு பள்ளி தலைமையாசிரியர் சுந்தர்ராஜா முன்னிலை வகித்தார்.
20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற போட்டியில் 14 வயதிற்குட்பட்டோர் போட்டியில் அல்லிநகரம் அரசு பள்ளி அணி முதல் பரிசையும், லாடனேந்தல் அரசு பள்ளி 2ம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்டோர் போட்டி யில் பழையனுார் அரசு பள்ளி முதலிடத்தையும், மணலுார் அழகுமலர் பள்ளி 2ம் இடத்தையும், 19 வயதிற்குட்பட்டோர் போட்டியில் அல்லிநகரம் அரசு பள்ளி முதலிடத்தையும், திருப்புவனம் ஜாஸ் பள்ளி 2ம் இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.