/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் வைகை ஆற்றங்கரை சீரமைப்பு
/
திருப்புவனத்தில் வைகை ஆற்றங்கரை சீரமைப்பு
ADDED : ஜன 13, 2025 06:46 AM
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றங்கரையை பொதுப்பணித்துறையினர் கடந்த நான்கு நாட்களாக சீரமைத்து வருகின்றனர்.
வைகை அணையை நம்பி சிவகங்கை மாவட்டத்தில் விவசாய பணிகள் நடைபெறுகின்றன. வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
வைகை ஆற்றில் மணல் திருட்டு காரணமாக ஆறு பள்ளமாகவும் கால்வாய்கள் மேடாகவும் மாறிவிட்டதால் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம் இருந்தது.
இதனையடுத்து கால்வாய்களில் தண்ணீர் கொண்டு செல்ல வசதியாக வைகை ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
கானூர் கண்மாய் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வசதியாக தடுப்பணைகளை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து வைகை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி தொடங்க உள்ளது. தடுப்பணை கட்டப்பட உள்ளதையடுத்து வைகை ஆற்றின் கரைகளை சீரமைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்புவனம் புதூரில் இருந்து மாரநாடு தடுப்பணை வரை உள்ள கரையை இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடக்கிறது.
கரையை ஒட்டி உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி இடையே ஆற்றிற்குள் வளர்ந்துள்ள நாணல், கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.