ADDED : அக் 03, 2024 04:34 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி: கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் பாலிடெக்னிக் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணி எச்சரிக்கை குறித்த ஒத்திகை பயிற்சி நடந்தது.
கோவிலூர் ஆதினம் நாராயண ஞான தேசிக சுவாமி தலைமையேற்றார். தாளாளர் வீரப்பன் முன்னிலை வகித்தார். முதல்வர் மாயாண்டி, தீயணைப்பு நிலைய அலுவலர் நவநீத கிருஷ்ணன் மற்றும் மீட்பு குழுவினர் என்.எஸ்.எஸ்., அலுவலர் வேலு ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
