/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
தாயமங்கலம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : பிப் 04, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி, : தாயமங்கலம் பிர்க்காவுக்குட்பட்ட காரைக்குளம் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்ததால் அப்பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி னர்.இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை விடுத்து வந்தனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று கால்வாயை அளவீடு செய்து அதிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.