/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூர்- சுண்ணாம்பிருப்பு ரோட்டை மேம்படுத்த கோரிக்கை
/
திருக்கோஷ்டியூர்- சுண்ணாம்பிருப்பு ரோட்டை மேம்படுத்த கோரிக்கை
திருக்கோஷ்டியூர்- சுண்ணாம்பிருப்பு ரோட்டை மேம்படுத்த கோரிக்கை
திருக்கோஷ்டியூர்- சுண்ணாம்பிருப்பு ரோட்டை மேம்படுத்த கோரிக்கை
ADDED : பிப் 13, 2024 06:40 AM
திருக்கோஷ்டியூர், : திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப விழாவிற்கு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உதவும் சுண்ணாம்பிருப்பு-திருக்கோஷ்டியூர் ரோட்டை புதுப்பிக்க பக்தர்கள் கோரியுள்ளனர்.
மாசித் தெப்ப விழாவிற்கு பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருவது வழக்கம். மதுரை பகுதியினர் வருவதற்கு சுண்ணாம்பிருப்பு-திருக்கோஷ்டியூர் ரோடு பயன்படும். 8 கி.மீ. நீளமுள்ள இந்த சாலை மாவட்ட முதன்மைச்சாலையாகும்.
12 அடி அகலமுள்ள ஒற்றை சாலையாக உள்ளது. தரம் உயர்த்தப்பட்டாலும், விரிவுபடுத்தப்படவில்லை. தற்போது இந்த ரோடு போடப்பட்டு 5 ஆண்டுகளாகி விட்டன. பல இடங்களில் சேதமடைந்து விட்டது.
எனவே இந்த ரோட்டை 16 அடி அகல ரோடாக நெடுஞ்சாலைத் துறையினர் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். தெப்பத்திற்கு முன் புதுப்பித்தால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.