/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராபைட் ஆலை ஊழியர்களுக்கு 53 சதவீத அகவிலைப்படி வழங்குக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை
/
கிராபைட் ஆலை ஊழியர்களுக்கு 53 சதவீத அகவிலைப்படி வழங்குக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை
கிராபைட் ஆலை ஊழியர்களுக்கு 53 சதவீத அகவிலைப்படி வழங்குக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை
கிராபைட் ஆலை ஊழியர்களுக்கு 53 சதவீத அகவிலைப்படி வழங்குக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை
ADDED : ஜன 23, 2025 04:14 AM
சிவகங்கை: தமிழ்நாடு கனிம நிறுவன ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 53 சதவீதத்தை அரசு வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம், தொ.மு.ச.,வினர் மனு அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம், கோமாளிபட்டியில் தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில் கிராபைட்' துகள் உற்பத்தி தொழிற்சாலை செயல்படுகிறது. இதில் கிடைக்கும் முதல் தர கிராபைட் துகள்' மூலம் பென்சில், உயராய்வு தடுப்பான்கள், தங்கம், இரும்பு போன்ற உலோகத்தை உருக்கும் கொள்திறன், ராக்கெட்டில் அதிக வெப்பத்தை தாங்கும் சக்தி கொண்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
இது தவிர ஆந்திராவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இக்கிராபைட் ஆலையில் மேலாளர் முதல் அலுவலர், ஊழியர்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொடர்ந்து இந்த ஆலையை விரிவுபடுத்தி, புதுப்பிக்க அரசு முன்வரவில்லை. இதனால், நாளுக்கு நாள் தனது பொலிவை கிராபைட் ஆலை' இழந்து வருகிறது.
கிராபைட் துகள்' உற்பத்தி செய்வதில் அதிகளவில் கனிம நிறுவனம் அக்கறை செலுத்தவில்லை என ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 53 சதவீதமாக உயர்த்தியுள்ளனர். ஆனால், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் கீழ் சிவகங்கையில் செயல்படும் கிராபைட் ஆலையில்' பணிபுரியும் 200 ஊழியர்கள் 2024 செப்., முதல் 12 சதவீத அகவிலைப்படியை மட்டுமே பெற்று வருகின்றனர். இதனால், மாத சம்பளத்தில் அகவிலைப்படி தொகை பல ஆயிரம் வரை அலுவலர், ஊழியர்கள் இழக்கின்றனர்.
முதல்வரிடம் மனு
சிவகங்கை கிராபைட் ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 53 சதவீதத்தை வழங்க, அரசு உத்தரவிட வேண்டும் என நேற்று சிவகங்கை வந்த முதல்வர் ஸ்டாலினிடம், தமிழ்நாடு கனிம நிறுவன தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலு, செயலாளர் குமார், பொருளாளர் சிவசக்தி ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

