/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டரமாணிக்கம் ரோட்டில் வடிகால் அமைக்க கோரிக்கை
/
கண்டரமாணிக்கம் ரோட்டில் வடிகால் அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 26, 2025 11:50 PM

திருப்புத்துார்; திருப்புத்துார் தென்மாப்பட்டில் கண்டரமாணிக்கம் ரோட்டில் பாலத்திற்கு தடுப்புச்சுவர், வடிகாலை நீட்டிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துாரிலிருந்து கண்டரமாணிக்கம் செல்லும் ரோட்டில் தென்மாப்பட்டு உள்ளது. இந்த ரோட்டோரத்தில் அட்டக்குளம், சின்ன சீதளிக்குளம், தம்மம் ஊருணி போன்ற நீர்நிலைகள் உள்ளன. தற்போது ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் அட்டக்குளம்,சின்ன சீதளிக்குளம் ஊருணியோரத்தில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் தேவையான இடங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தவும் கோருகின்றனர்.
மேலும் சீதளிக்குளம் வரத்துக்கால்வாய்க்கான பாலத்தில் தடுப்புச்சுவர் சிறிதாக உள்ளதால் ரோட்டோரத்தில் மண் சரிந்து விபத்து அபாயம் உள்ளது. இதனால் தடுப்புச்சுவரை நீட்டிக்கவும், ரோட்டோரத்தில் பாதியுடன் நிற்கும் வடிகாலை நீட்டித்து அப்பகுதியில் ரோட்டை பாதுகாக்க கோரியுள்ளனர்.