/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கைக்கு இரவு நேர பஸ்கள் இயக்க கோரிக்கை
/
சிவகங்கைக்கு இரவு நேர பஸ்கள் இயக்க கோரிக்கை
ADDED : நவ 01, 2024 04:58 AM
சிவகங்கை: சிவகங்கையில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு இரவில்கூடுதல் பஸ்களை இயக்க பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
சிவகங்கையில் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு அரசு மருத்துவ கல்லுாரி, கலெக்டர் அலுவலகம் செயல்படுகின்றன. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து இங்கு வருகின்றனர். தினமும் 5 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர்.
சிவகங்கையில் இருந்து 34 டவுன் பஸ், 32 புற நகர் பஸ்களும், சென்னை பஸ்களும் இயக்கப்படுகின்றன. திருப்புத்துாருக்கு இரவு 9:30 மணி, மானாமதுரைக்கு இரவு 9:45 மணி, மதுரைக்கு இரவு 10:45 மணி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதற்கு பின் இரவு நேர பஸ்கள் இல்லை. சிவகங்கைக்கு கூடுதலாக இரவு நேர பஸ்களை இயக்க வேண்டும்.