ADDED : பிப் 15, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியான 70 வயது வந்த ஓய்வூதியருக்கு கூடுதல் 10 சதவீத ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுசிலாதேவி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துச்சாமி கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட துணைத் தலைவர்கள் தேவி, சண்முகவேல்முருகன், ஆறுமுகம், கனகராஜ், மாவட்ட இணைச் செயலாளர்கள் கருப்பாயி, ரெங்கசாமி, பிச்சைப்பன், பாஸ்கரன் கலந்து கொண்டனர். மாநிலப் பொருளாளர் கிருஷ்ணன் சிறப்பு செய்தார். மாவட்டப் பொருளாளர் சகாயம் ஜோசப் சேவியர் நன்றி கூறினார்.
