ADDED : ஜன 09, 2024 12:24 AM
சிவகங்கை, : சிவகங்கையில் வருவாய்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
சங்க மாநில பொது செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நாகேந்திர முருகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வினோத்குமார், மாவட்ட பொருளாளர் மெகர்அலி முன்னிலை வகித்தனர்.
சங்க நிர்வாகிகள் மலைச்சாமி, சங்கர், கமலக்கண்ணன், ராணியம்மாள், கமரூதீன், முத்துராமலிங்கம் பங்கேற்றனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
மாவட்ட தலைவராக பூங்கோதை, செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு புதிதாக 109 பணியிடங்களை ஏற்படுத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது. நேரடி நியமன அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சம்பளம் மற்றும் தனி சம்பளம் வழங்க வேண்டும் என தீர்மானித்தனர்.