ADDED : பிப் 23, 2024 05:13 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தால், பணிகள் பாதித்தது. சிவகங்கை மாவட்ட வருவாய்துறையின் கீழ் சிவகங்கை, தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகங்கள், 9 தாசில்தார் அலுவலகங்கள், பிற வருவாய்துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்படுகின்றன.
பணியிறக்கத்தால் பாதித்த துணை தாசில்தார்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கு, இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் திருத்தம் வெளியிட வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மாவட்ட அளவில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
கலெக்டர், கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்கள் முன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தை நேற்று துவக்கியுள்ளனர். இன்றும் இப்போராட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் தமிழரசன், மாவட்ட தலைவர் சேகர், செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் உட்பட 400 க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்று வருவாய்துறை சார்ந்த பணிகள் அனைத்தும் நடைபெறவில்லை.