தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வருவாய்துறை ஸ்டிரைக்

வருவாய்துறை ஸ்டிரைக்

வருவாய்துறை ஸ்டிரைக்


ADDED : மார் 01, 2024 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை : சிவகங்கையில் 63 சதவீத வருவாய்துறை அலுவலர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பணிகள் பாதிப்படைந்தன.

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பிப்., 27 முதல் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இளநிலை உதவியாளர் முதல் தாசில்தார் வரை 497 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் 164 பேர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். 20 பேர் விடுப்பில் சென்றனர்.

எஞ்சிய 313 பேர் என 63 சதவீத ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஏ.தமிழரசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us